
"ம் நாங்க இந்த கதையை நம்பணுமாக்கும் " என்றாள். "hey please யா" என்றேன் . "போய் தொலை " என்றாள் சிரித்தபடி. "இப்படியே போனால் studies இல் concentrate பண்ண முடியாது just a friendly advice" என்றாள். " I know இனி இப்படி நடக்காமல் இருக்க try பண்ணுறன் இன்டைக்கு மட்டும் please.." என வழிந்தேன். "உனக்கு பசிக்குதா இல்லை பிறகு food court போவமா ?"என்ற நித்தியின் கேள்விக்கு "இல்லை இப்ப பசிக்கலை" என்றேன். "இனி Honeyயை காணும் வரை உனக்கு பசிக்காது" என்ற நித்தியின் கேலிக்கு " hey உனக்கும் ஒரு காலம் வரும் அப்ப madam நீங்கள் என்ன செய்ய போறிங்கள் என்று பாப்பம் " என சொல்லியவாறு computer lab நோக்கி நடந்தேன்.
Java assignment அரைவாசி முடித்து uni centre food court இல் சாப்பிடுகையில் மீண்டும் சிணுங்கியது cell. ஒரு கையால் cell silenceல் போட்டவாறு போகட்டுமா என்றேன் நான். "ம்ம் .. 9க்கு முதல் வந்திரூ இல்லாடில் அம்மா phone பண்ணினால் என்னால் பதில் சொல்ல முடியாது" என சிரித்தபடி நித்தி தலை அசைக்க parking lot நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
இந்த இரண்டு மாதத்தில் Hariய் புரிந்து கொண்டது என்னவோ கொஞ்சம் தான் ஆறு மாதத்திற்கு முதல் "proposal ஒன்று வந்திருக்கு" என்று அம்மா ஆரம்பிக்கும் போதே "எனக்கு இப்ப பார்க்க வேண்டாம், வேணும் என்டால் அண்ணாவுக்கு பாருங்கோ, நான் படித்து முடித்த பிறகு தான் marry பண்ணுவதை பற்றி யோசிப்பன்" என நான் வியூகம் அமைக்க தொடங்கும் போதே அம்மா தனது போர் முறையை மாற்ற தொடங்கி விட்டார். "உன்னை யார் இப்ப marry பண்ண சொன்னது , இப்ப register பண்ணு படிப்பு முடிய விட்டு பிறகு பாப்பம் " " இப்ப என்ன அவசரம் எனக்கு வேண்டாம்" என்ன நான் கத்த தொடங்கும் முன் " மகள் உனக்கு பிடித்திருந்தால் தான் மேற்கொண்டு பேசுவம் முதலில் போட்டோ பார் " என அப்பாவும் அம்மாவுடன் சேர்ந்து ஆரம்பித்தார்.
இந்த இரண்டு மாதத்தில் வீட்ற்க்கு தெரியாமல் இது நான்காவது சந்திப்பு. ஒவ்வொரு முறையும் Harri வரும் போதெல்லாம் கேட்க்க நினைத்த ஆயிரம் கேள்விகளும் அடுத்த முறை கேட்கலாம் என்றே தள்ளி போய் கொண்டிருக்கிறது.
இன்னமும் முடிக்க பட்டாத Assignments இரண்டையும் முடித்துவிட்டு தூங்க போக எப்படியும் 4 மணி ஆகப் போகிறது. நாளைக்கு morning lab வேறு இருக்கிறது. இப்படி ஓன்றும் சொல்லாமல் Harri வருவது இலேசாக கோபத்தை வர வைத்தது. முன்னரே சொல்லி இருந்தால் Assignments முடித்து விட்டு காத்திருந்து இருக்கலாம். இந்த முறை எப்படியும் சொல்லி விட வேண்டும் இனி இப்படி சொல்லாமல் வர வேண்டாம் என்று.Harriஇன் car parking lotஇன் இடது புறம் நிற்பது தெரிந்தது. ஒடி சென்று ஏறிக் கொள்ள "Hi Kutty" என்றது Harriஇன் குரல். என்னையும் அறியாமல் புன்னகையோடு 'Hi" என்றேன்.
"இப்ப சொல்லு ஏன் இந்த திடிர் visit"
"Hey relax உன்னை ஒன்டும் கடித்து தின்ன மாட்டான் பயப்பிட வேண்டாம்"
" விளையாடதே 6 hours drive பண்ணி 2 hours spend பண்ண வந்தியா"
"ம்...I want to see you அது தான் வந்தனான்"
" பொய் வேற reason இருக்கு..please சொல்லு"
"நீயே கண்டு பிடி இன்னமும் time இருக்கு அதுக்கு முதல் எனக்கு பசிக்குது சாப்பிட போவம்"
Restaurantஇல் order கொடுத்து விட்டு "என்ன கண்டு பிடிச்சாச்சா.." என்ற Harriக்கு "Time வரேக்க நீயே சொல்லு" என்றேன்.
தொடரும்....